ஸ்ரீபெரும்புதூர் அருகே திட்டம் போட்டு வீடு புகுந்து கொள்ளையடித்த கும்பலை கூண்டோடு கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே மலைப்பட்டு பலவத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராதா. இவரது மகன் ராஜேஷ் வ/ 40 . சொந்தமாக டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி இரவு ராஜேஷ் வீட்டிலிருந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வீட்டிற்குள்ளே நுழைந்து கத்தியால் ராஜஷை சரமாரியாக தாக்கி, அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சோமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட சோமங்கலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கத்தியால் தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், குற்றவாளிகள் பூந்தமல்லி பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனே பூந்தமல்லி விரைந்து சென்ற சோமங்கலம் காவல்துறையினர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சுந்தரபாண்டி/26, நம்பி /20 ,நல்ல கண்ணு/25, தூத்துக்குடியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு/24 ,சேதுபதி பாண்டியன்/28 சென்னை சேர்ந்த கோடீஸ்வரன்/40, சங்கரன்கோவில் பகுதியில் சேர்ந்த சரவணக்குமார் /28 மற்றும் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள்/47 ஆகிய ஏழு குற்றவாளிகளை சுற்றி வளைத்து கைது செய்தனர்.



கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீசார் விசாரித்ததில் கோடீஸ்வரன் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் டிராவல்ஸ் இன்சார்ஜாக பணியாற்றி வந்த நிலையில், அதே ஹோட்டலில் சேதுபதி பாண்டியன் தனது நான்கு சக்கர வாகனத்தை வாடகைக்கு விட்டுள்ளார். கோடீஸ்வரன் மற்றும் சேதுபதி பாண்டியனுக்கு பணக்கஷ்டம் இருந்ததால் பணக்கஷ்டத்தை தீர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்று தனது நண்பர்களை அழைத்து திட்டம் போட்டுள்ளார்கள்.


அப்பொழுது சேதுபதி பாண்டியன் நண்பனான பெருமாள் கொள்ளையடித்தால் நிறைய சம்பாதிக்கலாம் என கூறி தனது இரு சக்கர வாகனத்தின் மூலம் சென்று ரூட் போட்டு கொடுத்துள்ளார். அதன்படி வீடு புகுந்து வீட்டுக்குள் இருந்த ராஜேஷை வெட்டி விட்டு நகையை பிடுங்கி சென்றதாக கூறியுள்ளனர்.


பின்பு சோமங்கலம் காவல்துறையினர் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
