கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பை-பாஸ் சாலையில் ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த பகுதியில் அன்பழகன் என்பவருக்கு சொந்தமான 60 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் குடியிருப்புடன் கூடிய தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வரும் கட்டிடத்தில், திடீரென மொட்டை மாடியில் இருந்த பால்கனி மேல் கான்கிரீட் தளம் இடிந்து கீழே விழுந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மின்சாரத்துறை உதவியுடன் மின்சாரத்தை துண்டித்த பிறகு, இடிந்து விழுந்த சுவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுவர் இடிந்த நேரத்தில் மருத்துவமனை திறக்காததாலும், பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 60 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியதில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அச்சாலௌ ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு பேருந்துகள், வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது




