• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அறக்கட்டளையின் முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலம்…

ByG. Anbalagan

Apr 1, 2025

மக்களுக்காக அறக்கட்டளையின் 100 ஏழை குடும்பங்களுக்கு லட்சரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்,சமுக சேவையாளர்களுக்கு விருதுகள்,வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கௌரவம் என அனைவரின் பாராட்டுகளை பெற்ற முப்பெரும் தமிழ் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மக்களுக்காக அறக்கட்டளை, தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் முப்பெரும் தமிழ் திருவிழா உதகையில் கோலகலமாக இன்று நடைபெற்றது.

அய்யன் திருவள்ளவர் விருதுகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு மலர்வெளியிட்டுவிழா என முப்பெரும் விழாவாக JSS மருந்தாக்கியல் கல்லூரி விழா அரங்கில் நடைபெற்ற விழாவிற்கு மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

திருக்காந்தல் தட்சிணாமூர்த்தி திருமடாலய தவத்திரு .குமார‌ தேவ அடிகளார் அவர்கள்
தமிழ்வெங்கடேசன் என்னும் நான் என்ற சிறப்பு மலரை வெளியிட்டு அருளாசி வழங்கினார். ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் கே.பி.அருண் வாழ்த்துரை வழங்கினார்.

மாவட்டத்தில் மிக சிறப்பான சமுக பணிகளை செய்துவரும் மிக சிறந்த சமுக சேவகர் சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கபட்டது.

கோத்தகிரி பேருராட்சி செயல் அலுவலர் முகமதுஇப்ராகிம்,சமுக சேவகரும் தொழில் அதிபருமான கடலூரை சேர்ந்த முருகன் ,சமுக சேவகரும் தொழில் அதிபருமான கோவையை சேர்ந்த செந்தில்குமார்,நகர மன்ற உறுப்பினரும் திட்டகுழுஉறுப்பினரும் திமுக நகரசெயலாளரும் சமுக சேவகருமான ஆகியோருக்கு சிறப்பான சமுக சேவர்களுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதுகள் வழங்கபட்டது்.

சிறந்த சமுக ஆர்வலர்களுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதுகள்

சிறப்பான மக்ள் பணியுடன் சமுக பணியை செய்து வரும் உதகை நகர மன்ற உறுப்பினரும் அதிமுக பாசறை மாவட்டசெயலாளருமான அக்கீம்பாபு, உதகை நகர மன்ற உறுப்பினர் லயலோகுமார், ஜெயலட்சுமி, தனலட்சுமி ஆகியோருக்கு சிறப்பான மக்கள் நலபணிகளை பாராட்டி அய்யன் திருவள்ளுவர் விருதுகள் வழங்கபட்டது.

சமுக ஆர்வலர்(கல்வித் துறை)பேரா.எல்.மூர்த்தி ,தேசிய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு லஞ்ச ஒழிப்பு பிரிவு நீலகிரி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவரும் சமுக சேவருமான ஜாம்பவான் ஜெரால்டு,யாதும் ஊரே யாவரும் கேளீர் அறக்கட்டளை நிறுவனரும் ஆன்மீக சொற்பொழிவாளரும் செய்திவாசிப்பாளருமான சரவணன்,
நல்உள்ளம் அறக்கட்டளை நிறுவனரும் சிறந்த சமுக சேவகருமான உலிகல்சண்முகம் ,
விடியல் அறக்கட்டளை &நீலகிரி தினவிடியல் நிறுவனர் தலைவர் லாரண்ஸ்,இயற்கை காதலனும் சமுக ஆர்வலரும் மிக சிறப்பான புகைபடகலைஞருமான நவாஸ், ஆகியோருக்கு சமுக ஆர்வலர்களுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதுகள் வழங்கபட்டது.

மதிமுகம் செய்தியாளர் தினேஷ்,எம் நாடு செய்தியாளர் தினேஷ்,நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சக்தி கோ. சுரேஷ் ரமணா,நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் நிறுவனர் தலைவர் திரு.ரா.வினோத் குமார், நீலகிரி சோசியல் மீடியா நிறுவனர் தலைவர் திரு.இ.சிக்கந்தர் பாஷா,அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிறுவனர் தலைவர் சை.கௌ.சாதிக்,திகழ் அறக்கட்டளை நிறுவனர் திரு.ரா. கோவர்த்தனன் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கபட்டது.

விழாவில் மக்களுக்காக அறககட்டளையின் சார்பில் 100 ஏழை குடும்பங்களுக்கு ,அரிசி, 10 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நலத்திட்ட உதவிகளாய் மக்களுக்காக அறக்கட்டளை நிறுவன தலைவர் தமிழ்வெங்கடேசன் தலைமையில் வழங்கபட்டன. விழாவில்கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கபட்டது.