அனைத்து கட்சி கூட்டத்திற்கு கலந்து கொள்ள கர்நாடகா மாநிலம் துணை முதல்வர் டிகே சிவகுமார் சென்னை வந்தால் அவரை எதிர்த்து பாஜக சார்பில் கருப்புக் கொடி காட்டுவோம்.
மதுபான ஊழலில் தமிழ்நாடு அரசு பதில் சொல்லும் வரை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்து விலகும் வரை பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார் .

சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறுகையில்,
தமிழ்நாடு அரசு 2025 மற்றும் 26 காண நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர், இந்த நிதிநிலை அறிக்கை பதிலாக ஒரு வெற்று பேப்பர் கொடுத்து விட்டு சென்றிருக்கலாம் அந்த அளவிற்கு இது ஒரு வெற்று அறிக்கை,
இந்தியாவில் ஒரு மாநில அரசு 10 லட்சம் கோடி கடனை தொடும் அளவிற்கு தமிழகத்தை மாற்றியுள்ளனர், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் நாம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம், இது போன்ற எந்த மாநிலமும் கடன் வாங்க மாட்டார்கள், எந்த மாநிலமும் தொடாத அளவிற்கு கடனை தமிழ்நாடு தொட்டுள்ளது,
மாநில அரசுக்கு வரக்கூடிய வருவாய் 46,467 கோடி ரூபாய் ஆகும், சம்பளம், ஓய்வூதியம் கொடுப்பதற்கும் வாங்கிய கடனை கட்டுவதற்கு முடியவில்லை, இதனைத் தாண்டியும் கடன் வாங்குகிறோம்,1லட்சத்து 62 ஆயிரத்து 96 கோடி ரூபாய் தமிழ்நாடு கடன் வாங்கி உள்ளது, இதனை சம்பளம் ஓய்வூதியம் கொடுத்துவிட்டு தத்தளித்துக் கொண்டிருக்கிற மாநிலம் தமிழ்நாடு,
தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த பட்ஜெட்டில் 57,237 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர், குஜராத் மாநிலம் உள்கட்ட அமைப்பு வசதியை மேம்படுத்த 95 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது, இதன் மூலம் ஒரு மாநிலம் வளர்ச்சி பாதையில் போகிறதா வீழ்ச்சி பாதையில் போகிறதா என்பது தெரியும்,
4 லட்சத்தி 39 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தமிழ்நாடு அரசு பட்ஜெட் போட்டு, அதில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழ்நாடு அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது, இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை கடன் உயர்ந்திருக்கிறது கடன் சுமை உயர்த்திருக்கிறார்கள் வெற்று அறிவிப்புகள் அதிகமாக உள்ளது, சென்ற ஆண்டு சொன்ன திட்டத்திற்கும் இந்த ஆண்டு சொன்ன திட்டத்திற்கும் இன்னும் நிதி ஒதுக்கவில்லை, ஒரு மாயாஜாலம் செய்து 20 நிமிடங்கள் முதல்வரை புகழ்வது திருக்குறளை இரண்டு நிமிடம் சொல்வது எனது செய்து கொண்டிருக்கிறார்கள்,
இந்தியாவிற்கு தமிழ்நாடு வழிகாட்டி எனக் கூறினார்கள், 50,000 கோடி டாஸ்மாக் வருமானத்தை வைத்து ஒரு லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறார்கள் இதுதான் இந்தியாவின் வழிகாட்டியா எதன் அடிப்படையில் அவர்கள் பட்ஜெட் தயார் செய்து அவர்கள் அவர்களுக்குள்ளேயே சட்டமன்றத்தில் புகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை,
தமிழகத்தை இன்னும் அதள பாதாளத்திருக்கு எடுத்துச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள், இன்னும் ஆறு தலைமுறைக்கு வாங்கிய கடனுக்கு வட்டி ஓட்டும் கட்டிக் கொண்டிருக்க போகிறோம், மற்ற மாநிலங்கள் முன்னேற்ற பாதைக்கு போய்க்கொண்டிருப்பார்கள்,
தமிழ்நாட்டு மக்கள் டெல்லி ஊழல் சத்தீஸ்கர் ஊழலை தெரிந்து கொள்ள வேண்டும், இரண்டிலும் மதுபானம் ஊழல் நடைபெற்று உள்ளது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலாவது டாஸ்மாக் நிறுவனம் ஐந்தாயிரம் மதுபான கடைகள் எலைட் பார் மதுபான கூடங்கள், இரண்டாவது மதுபானத்தை தயார் செய்யும் ஆலைகள், மூன்றாவது பாட்டில் கம்பெனிகள், இதில் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,