• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வரும் 30ஆம் தேதி ஆண்டின் முதல் சூரியகிரகணம்…

Byகாயத்ரி

Apr 26, 2022

இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் வருகிற 30-ந்தேதி நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி 30-ந்தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 4.08 மணி வரை நீடிக்கிறது. இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நிகழ்வதால் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது.அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்த ஆண்டுக்கான 2-வது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25-ந்தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் இந்தியாவில் பார்க்க முடியாது.