• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினர்…

ByKalamegam Viswanathan

Dec 3, 2023

தனியாக இருந்த குழந்தை வீட்டில் உள்ளே உள் தாப்பாள் போட்டுக் கொண்டதால் அவதிப்பட்ட குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆர்வி பட்டி சேர்ந்த ரவிக்குமார் இவர்களது மகள் மேகவர்ஷினி வயது 6 பெற்றோர்கள் வெளியே படுத்துக் கொண்டிருந்த நிலையில் குழந்தை தனி அறையில் சென்று தெரியாமல் டப்பா போட்டுவிட்டது. குழந்தை எவ்வளவு முயன்றும் கதவை திறக்க முடியவில்லை. இதனால் பதறிப்போன
மேகவர்ஷினி அழு குரல் கேட்டு தந்தை ரவிக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை திறக்க முயன்றுள்ளனர். எனினும் கதவு திறக்க முடியவில்லை. உடனடியாக மதுரை திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜன்னல் வழியாக குழந்தையை ஆறுதல் கூறி பயப்பட வேண்டாம். நாங்கள் கதவை திறந்து விடுவோம். தைரியமாக இரு என தீயணைப்பு வீரர்கள் சொல்லவே முன் பகுதியில் கடப்பாரகை கொண்டு கதவை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். இதனால் ஆர்விபட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது எனினும் குழந்தையை சமாதானப்படுத்தி குழந்தை பதற்றம் அடையாத அளவிற்கு தீயணைப்புத் துறையினர் குழந்தைக்கு பேச்சு கொடுத்து சாதித்திரமாக குழந்தையை மீட்டது. அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டை ஏற்படுத்தியது. இதனால் தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் பாராட்டி சென்றனர்.