• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

இன்று இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Byவிஷா

Mar 30, 2024

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது.
தமிழகத்தில் இதுவரை 1,749 வேட்புமனுக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த நிலையில், 664 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 1,085 வேட்புமனுக்கள் தகுதி வாய்ந்தவையாக ஏற்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 பேரின் வேட்பு மனுக்களும், தென்சென்னையில் 53 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக வடசென்னையில் 49 பேரின் மனுக்கள், நாமக்கல்லில் 48 பேரின் மனுக்கள், ஈரோட்டில் 47 மனுக்கள், கோவையில் 41 மனுக்கள், திருச்சியில் 38 மனுக்கள், வேலூர், திருவண்ணாமலையில் தலா 37 மனுக்கள், கிருஷ்ணகிரியில் 34 மனுக்கள், தூத்துக்குடியில் 26 மனுக்கள், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஆரணி தொகுதிகளில் தலா 32 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மேலும் அரக்கோணம், தேனியில் தலா 29 பேரின் மனுக்கள், சேலம், விருதுநகர், கன்னியாகுமரி ராமநாதபுரத்தில் தலா 27 பேரின் மனுக்கள், திருநெல்வேலி, தென்காசியில் தலா 26 பேரின் மனுக்கள், தர்மபுரியில் 25 மனுக்கள், பெரம்பலூரில் 23 பேரின் மனுக்கள், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரையில் தலா 21 பேரின் மனுக்கள், பொள்ளாச்சி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூரில் 19 பேரின் மனுக்கள், சிதம்பரத்தில் தலா 18 மனுக்கள், மயிலாடுதுறையில் 17 பேரின் மனுக்கள், திருப்பூர், நீலகிரியில் தலா 16 பேரின் மனுக்கள் திருவள்ளூரில் 14 மனுக்கள், காஞ்சிபுரம், தஞ்சாவூரில் தலா 13 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் என்றால் நாகப்பட்டினம் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
அதேபோல் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து சட்டசபை தேர்தலுக்கு 14 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம் அதே நேரத்தில் தொகுதி வாரியாக இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.