• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட பிச்சனை

ByA.Tamilselvan

Nov 24, 2022

நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து உதயநிதி ஸ்டாலின் சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.நடிகராக மட்டுமல்லாமல் விநியோகஸ்தராகவும், தயாரிப்பாளராகவும் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பல சுவாரஸ்யமான விஷயங்களை அதில் பகிர்ந்து கொண்டார்.அப்போது விஜய்க்கும் தனக்கும் Misunderstanding ஆகிவிட்டது என்று கூறினார். இது குறித்து விரிவாக கூறமுடியுமா என்று அவரிடம் கேள்வி எழுந்தது.அதை பற்றி பேசிய உதயநிதி, ” நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்களாக தான் இருந்தோம். ஆனால், இடையில் இருவருக்குள்ளும் Misunderstanding ஆகிவிட்டது. என்னை பற்றி அவரிடம் தவறாகவும், அவரை பற்றி எண்னிடம் தவறாகவும் சில நபர்கள் கூறினார்கள்.
அதனால் இருவருக்குள்ளும் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதன்பின் தான் ஒரு நாள் அவரை சந்தித்து, இதுதான் நடந்தது என்று தெளிவாக கூறிவிட்டேன். அதன்பின் இருவரும் சுமுகமாக பழக துவங்கிட்டோம் ” என்று கூறியுள்ளார்.