மூல வைகை ஆற்றின் கரையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளதால் தன்னுடைய விவசாயத்தின் நிலத்திற்கு செல்ல முடியாமல் தவிப்பதாக விவசாயி குற்றம் சாட்டி உள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு ஊராட்சி சேர்ந்த லட்சுமணன். இவருடைய நிலம் கடமலைக்குண்டு அருகே உள்ள மூல வைகை ஆற்றின் கரையில் உள்ளது.
இந்த நிலத்திற்கு செல்லக்கூடிய பாதையின் அருகே மூல வைகை ஆற்றின் கரையில் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபர் ஆக்கிரப்பு செய்து வைத்துள்ளதால் தன்னுடைய விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமலும் உழவுப்பணி, விவசாய நிலத்தில் விளையும் காய்கறிகளை கொண்டு செல்லவும், குப்பைகள் உள்ளிட்டதை, தனது தென்னந்தோப்பிற்கு கொண்டு செல்ல முடியாமல் தவிப்பதாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் மூல வைகை ஆற்றின் கரையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது இந்த தடுப்பணை கட்டும்பணிக்காக வருவாய் துறையினர் மூல வைகை ஆற்றில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்துகடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தடுப்பணை கட்டினர்.
இந்த நிலையில் தொடர்ந்து அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதால் தன்னுடைய விவசாய நிலத்திற்கு செல்ல முடியாத காரணத்தால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.