• Fri. Apr 26th, 2024

கேரள மாநிலம் புகழ்பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலய திருவிழா

தமிழர்கள் அதிக அளவில் கூடும் கேரள மாநிலம் புகழ்பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல ஆலய திருவிழா இம்மாதம் 27ஆம் தேதி மே மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது- நாகர்கோவிலில் தக்கலை குருகுல முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரி உயர் மறை மாவட்டத்தின் எடத்துவா புனித ஜார்ஜியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த ஆலயம் 1810 ஆம் ஆண்டு கட்டப்பட்டது , சிரோ மலபார் திருச்சபையின் 213 ஆண்டு பழமையான ஆலயம். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்று கடலில் திசைமாறி தடுமாறிய போது எடுத்துவா ஜார்ஜியார் கருணையால் அந்த ஆலயம் அருகே கரை ஒதுங்கியதாகவும். நாட்டு படகு கவிழ்ந்து கடல் அலைகளில் மீனவர்கள் தத்தளித்த போது. அசரீரியாக ஒரு குரல் மீனவர்கள் காதுகளில்.ஓங்கி அடிக்கும் அலை ஓசை மையும் தாண்டி கேட்ட அந்த குரல்.”என்றெடுத்துவா,என்றெடுத்துவா” என்ற குரல் கேட்டு மீனவர்கள் ஒலி வந்த திசையை நோக்கி நீந்தி சென்று அங்கிருந்த மண் திட்டை அணுகி அந்த பகுதியில் தஞ்சம் அடைந்த நிலையில்.அவர்கள் புனித ஜார்ஜுயாரல் காப்பற்ற பட்டத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள் என்பது பழங்காலம் தொட்டு ஐதீகம் நிலவி வருகிறது. மேலும் அசரீரியாக மீனவர்கள் காதுகளில் ஒலித்த என்றெடுத்து என்ற சொல்லே பின்னாளில் மருகி எடுத்து வா என்ற இன்றைய அடையாளமாகப் பெயராக மாறிவிட்டது என்ற கருத்து.கேரள,தமிழக மீனவர்கள் மத்தியில் உள்ள ஒரு கருத்தாகவும் இருக்கிறது. இதனால் அந்த திருவிழாவிற்கு கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான மீனவர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இன்று நாகர்கோவிலில் தக்கலை குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பரம்பில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடத்துவா ஜார்ஜியார் ஆலய ஆண்டு திருவிழா இம்மாதம் 27ஆம் தேதி துவங்கி மே மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் பத்து லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் தினம் மலையாளம் மற்றும் தமிழிலும் திருப்பலி நடைபெறுகிறது. தமிழர்களுக்காக தமிழ் திருப்பலியும், மலையாள மொழியிலும் திருப்பலியும் நடைபெறும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *