• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தனுஷ் ரசிகர்களை கவர்ந்த மாறன் படத்தின் பொல்லாத உலகம் பாடல்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள படம் மாறன்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படம் பிப்ரவரி மாதம் நேரடியாக ஒடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மாறன் படத்தின் பொல்லாத உலகம் என்ற பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடி நடித்திருக்கும் தனுஷ், பாடல் தொடங்கி முடியும் வரை முழு எனர்ஜியுடன் அதிரடி நடனமாடி இருக்கிறார். குறிப்பாக இதற்கு முன்பு பாடல் காட்சிகளில் அவர் ஆடிய நாடனங்களை விட இந்த பாடலில் உடலை வளைத்து நெளித்து அற்புதமான நடன அசைவுகளை வெளிப்படுத்தி உள்ளார் தனுஷ்.

இதன்காரணமாக இந்தப் பொல்லாத உலகம் பாடல் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.