சித்திரை மாதத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் வெங்கமேடு பாரதிதாசன் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மகாசக்தி மாரியம்மன் ஆலயத்தில் கரகம் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கரூர் வெங்கமேடு A-1 திரையரங்கம் அருகே உள்ள சுவாமி கிணற்றில் கரகம் பாலிக்கப்பட்டு தொடர்ந்து வான வேடிக்கைகளுடன் கோவில் பூசாரி சுவாமி மாரியம்மன் கரகத்தை தலையில் சுமந்தவாறு ஆலய முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தார்.
அதை தொடர்ந்து ஆலய வந்த பிறகு மூலவர் மாரியம்மன் கரகத்திற்கும் சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்று அனைவருக்கும், அன்னதான வழங்கப்பட்டது.
கரூர் வெங்கமேடு பாரதிதாசன் தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு வேம்பு மகாசக்தி மாரியம்மன் ஆலய சித்திரை மாத கரகம் ஆலயம் வரும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.