விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நடைபெற்ற வைகாசி திருவிழா முளைப்பாரி ஊர்வலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தத்துவமாக நிகழ்த்தப்பட்டது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள டி.கான்சாபுரம் பொட்டல்காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் இளம் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை பால்குடம் எடுத்தும், அக்கினி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேர்த்திக்கடன் ஊர்வலத்தின் போது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தேவராட்டம் ஆடி அனைவரின் கவனத்தை ஈர்த்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாகச் சென்று கோவில் வளாகத்தில் முளைப்பாரியை வைத்து கும்மியடித்து அம்மனை வழிபட்டனர்.

முளைப்பாரி ஊர்வலத்தில் மீனாட்சியம்மன், சொக்கநாதர், கள்ளழகர், அம்மன், கருப்பசாமி உள்ளிட்ட சுவாமிகளின் வடிவில் முளைப்பாரி வடிவமைக்கப்பட்டு அதனை பக்தர்கள் சுமந்து சென்றனர். அப்போது கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் முளைப்பாரியை வீரராகவ பெருமாள் வடிவிலான முளைப்பாரி எதிர்சேவையளித்து வரவேற்க மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தப்பட்டது. அப்போது பக்தர்கள் கள்ளழகரை தண்ணீர் பீச்சியடித்து மனம் குளிரச் செய்த நிகழ்வும் நடைபெற்றது.













; ?>)
; ?>)
; ?>)