• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்த தேர்தல் அதிகாரிகள்

Byவிஷா

Mar 28, 2024

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு, தேர்தல் அதிகாரிகள், தேர்தல் திருவிழா பத்திரிகை வழங்கி அழைப்பு விடுத்தது அனைவராலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.
திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் சுப கமலக் கண்ணன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் பாக்கியராஜ் மற்றும் அதிகாரிகள், நாச்சியார்கோவில் மற்றும் சுற்றுப் பகுதியில் வாக்குப் பதிவை அதிகரித்திடவும், தேர்தலில் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், அந்தப் பகுதியில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து, வாக்காளர்களுக்கு துண்டுப் பிரசுரங்களும், தேர்தல் திருவிழா அழைப்பிதழை தாம்பூலத்துடன் வழங்கப்பட்டது.