நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 6 கட்டங்களை நிறைவு செய்துள்ள நிலையில், இன்று 7வது கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் திருவிழா நிறைவடைகிறது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 6 கட்டத் தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. இன்று ஜுன் 1ம் தேதி 7வது மற்றும் கடைசி கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான வாரணாசியிலும் இன்று ஜுன் 1ம் தேதி தான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தனது விவேகானந்தர் மண்டப தியானத்தை இன்று முடித்துக் கொள்கிறார் மோடி.
இன்று ஜூன் 1ம் தேதி சனிக்கிழமை இறுதிகட்ட வாக்குப்பதிவு உ.பி, பீகார், ஒடிசா, சண்டிகர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ஜார்கண்ட் என 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த 57 மக்களவைத் தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைகிறது தேர்தல் திருவிழா
