• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை

பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் பட்டப் பகலில் வீட்டை உடைத்து ரூ. 20000 ரொக்கம் மற்றும் 10 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் மணி என்பவர் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை திருமண நிகழ்ச்சிக்காக சென்ற நிலையில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 20000 ரொக்கத்தை திருடி சென்றனர். மேலும் வீடு திரும்பிய வீட்டின் உரிமையாளர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் திருட்டு நடந்த இடத்தில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். பல்லடம் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20000 பணம் மற்றும் 10 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இரவு மற்றும் பகல் நேரத்திலும் ரோந்து பணிகளை காவலர்கள் அதிகரிக்க வேண்டும் என்றும் அதனை அதிகரித்தால் தான் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் குறையும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.