பிரதமர் மோடி பயணத்திட்டம் என்ன என்பது முறையாக எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு தான் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் .
டிடிவி தினகரன் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருப்பதாக.. கூறி வருகிறார். நாங்கள் அவ்வாறு கூறவில்லை நாங்கள் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமி பேட்டி,

அதிமுக சார்பில் தமிழக முழுவதும் வீடு வீடாகச் சென்று திமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் நீங்கள் போடுகிறீர்கள் என்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கூறி சர்வே எடுக்கப்பட்டுள்ளது. 10 மார்க்குக்கு எவ்வளவு மார்க் திமுக அரசுக்கு மக்கள் கொடுக்கின்றனர் என்று அறிவதற்காக அதிமுக சார்பில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
பிரதமர் மோடி பயணத்திட்டம் என்பது முறையாக எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்த பிறகு தான் பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் .
நேர்மையான காவல்துறை அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் மரியாதை இல்லை
நேர்மையாக பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் ஆர்டர் தான் பரிசாக திமுக அரசு கொடுக்கிறது. இது வன்மையாக கண்டனத்துக்குரியது
காவல்துறை அதிகாரிகளுக்கு பிரச்சனை என்றால் உடனடியாக உயர் காவல்துறை அதிகாரிகள் பேசி அதனை தீர்த்து வைக்க வேண்டும். இதுதான் அரசின் கடமை. அதை விடுத்து நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழி வாங்குவது கண்டனத்துக்குரியது. நல்ல அரசுக்கு இது அழகல்ல.
அதிமுக சார்பில் வீடு வீடாக சென்று திமுக ஆட்சிக்கு எவ்வளவு மார்க் நீங்கள் போடுகிறீர்கள் என்று கேட்போம் அவர்கள் கொடுத்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் இல்லை என்று கூறலாம். இதற்காக நாங்கள் அவர்களுடைய செல்போன் நம்பரை கேட்கப் போவது கிடையாது. அதிமுக பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி நடக்கிறது என்று கூறுகிறீர்கள் அது யார் செய்வது என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி வெளிப்படையாக இது அனைவருக்கும் தெரியும் யார் உடைக்க முயற்சி செய்வது என்று,

தமிழக முதல்வரும் துணை முதல்வரும் பிரதம மந்திரியின் வீட்டின் கதவை தட்டவில்லையா நான் தட்டியதை உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசுகிறார் அவர் என்ன செய்தார்.
அவர்கள் செய்தால் சரி நாங்கள் உள்துறை அமைச்சர்கள் சந்தித்தால் தவறா?
இந்திய நாட்டின் உள்துறை அமைச்சர் தானே அவர் வேறு யார் வீட்டு தட்டினோமா இதில் என்ன தவறு உள்ளது. நான் டெல்லி சென்ற போது முதல்வர் தான் உள்துறை அமைச்சர் சந்தித்தால் தமிழ்நாட்டு பிரச்சனையை எடுத்துக் கூறுங்கள் என்று கூறினார்.
டிடிவி தினகரன் கூட்டணி அமைச்சரவை என்று கூறுவதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை அவர்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார். நாங்கள் ஒன்றும் கூறவில்லை நாங்கள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு பயணம் குறித்து கேட்டதற்கு, தங்களுடைய கட்சியை வளர்ப்பதற்கு ஒரு தலைவர் ஒரு நடவடிக்கை எடுப்பார். அதை நாங்கள் ஏன் குறை சொல்ல வேண்டும் கருத்து சொல்ல வேண்டும்.
மக்களுடைய பிரச்சினையை தெரியாத அரசாக தான் திமுக அரசு உள்ளது கொரோனா காரணமாக இருந்ததால்தான் அன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அரசால் லேப்டாப் கொடுக்க முடியவில்லை.
இதேபோன்று தாலிக்கு தங்கம் திட்டமும் அதன் கொரோனா காலத்தால் தான் கொடுக்க முடியாமல் இருந்தது. இந்தத் திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை திமுக அரசு வந்து தான் இந்த திட்டத்தை நிறுத்தியது.
அதிமுக அரசில் கொண்டுவரப்பட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசை கிடப்பில் போடுகின்றனர். அதேபோன்றுதான் காவேரி வைகை குண்டார் இணைப்பு திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர்.
அதிமுக அரசு வந்தவுடன் மீண்டும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டுப் போய்விட்டது.
சமீபத்தில் வறுமையை காரணமாக வைத்து பொதுமக்களிடம் இருந்து கிட்னி திருட்டு நடைபெறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,
சமீபத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருக்கு சம்பந்தப்பட்ட ஒரு மருத்துவமனை என்பது அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சம்பவம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்
வறுமையை காரணமாக வைத்து இது போன்ற சம்பவங்கள் திருட்டுகள் நடப்பது என்பது மிகவும் வேதனைக்குரிய செயல்.
என்னை எந்த அளவிற்கு கீழ்த்தரமாக முதல்வரும் துணை முதல்வர்களும் பேசினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நான் யாரையும் தரக்குறைவாக இதுவரை பேசியது கிடையாது.
வேகமாக பேசும் போது ஒருமையில் தவறுதலாக பேசியிருக்கலாம் அது தவறு என்றால் என்ன எந்த அளவிற்கு திமுகவினர் கீழ்த்தரமாக பேசுகின்றனர் அது தவறு கிடையாது.