மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டுமான பணிகளை ஒபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏ வுமான அய்யப்பன் ஆய்வு மேற்கொண்டார்.,
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன்.,

உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்ட 59 லட்சம் அரசு நிதியும், 21 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் நிதியும் வழங்கி சபாநாயகர் உத்தரவிட்டார்., இந்த பணிகள் முடிவடைந்துவிட்டது., வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசதன்று திறப்பு விழா நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது., அதற்காக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களுக்கும், சபாநாயகர் ஐயா அப்பாவுக்கும் தொகுதி மக்கள் சார்பாகவும், எனது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.,

கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மூலமே ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், கடந்த 22ஆம் தேதி சட்டத்தை உருவாக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டு கள்ளர் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை அந்த அந்த பள்ளி மேலாண்மை குழுவினரே நிரப்பி கொள்ளவும், அதற்கான ஊதியமும் நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது., இதன் மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதியில் உள்ள கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்காது., அதற்காகவும் முதல்வருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர்களுக்கும் மூன்று மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.,
ஒபிஎஸ் என்றைக்கு இந்த இயக்கத்திலிருந்து தூக்கி எரியப்பட்டாரோ, அன்றிலிருந்து இந்த இயக்கம் ஒன்றிணைய வேண்டும், அப்படி ஒன்றிணைந்தால் தான் அம்மா ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் தினந்தோறும் அறிக்கை விடுத்து வருகிறார்., அந்த அறிக்கையை தா|ன் இன்றும் பெரியகுளம் பண்ணை வீட்டில் செய்தியாக வெளியிட்டுள்ளார்.,

அவர் கூறுவது தான் 100 க்கு 100 உண்மை, அதிமுக எனும் மாபெரும் இயக்கம், அம்மா ஆட்சி வர வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் அப்படி ஒன்றியா விட்டால் கண்டிப்பாக அம்மாவின் ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக இருக்கும்.,
அண்ணன் எடப்பாடி அவர்களும், அண்ணன் டிடிவி தினகரன் அவர்களும் இணைந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கையாக வைத்துள்ளார்., அந்த கோரிக்கை நல்ல முடிவாக, செயல்பாட்டிற்கு வந்தால் கண்டிப்பாக அம்மாவின் ஆட்சி 2026 ல் மலரும்.,
என்னுடைய நிலைப்பாடு ஒபிஎஸ் வழியில் தான், எனக்கு எந்த நிலை வந்தாலும் அது அண்ணன் ஒபிஎஸ் வழிகாட்டுதலோடு இருக்கும், அதன்படி செயல்படுவேன், அதில் எந்த மாற்றமும் இல்லை., என பேட்டியளித்தார்.






