• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர்..,

ByKalamegam Viswanathan

Oct 25, 2025

மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கூடகோவில் மேல புடிக்குண்டு கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி தொகுதி பொறுப்பாளர் டிஸ்கோ அலாவுதீன் . ஆகிய தலைமையில் ஒப்பற்ற தலைவர் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

இதில் உரையாற்றிய மணிமாறன் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரபடவில்லை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜகவுடன் அதிமுக சேர்ந்து முடக்க பார்க்கிறது எனவும் உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவராக தமிழர் முதல்வர் மு க ஸ்டாலின் செயல்படுகிறார். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் இவ்வாறு பேசினார் இதில் ஒன்றிய செயலாளர்களும் மதன் முத்துராமன் ரம்யா முத்துக்குமார் நிரஞ்சன் ஆதவன் விமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.