தென்காசி மாவட்டத்தில் 1190 சுய உதவி குழுக்களுக்கு 50.166 கோடி ரூபாய் வங்கி கடனுதவி மற்றும் நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர்ராஜ் வழங்கினார்.

தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள சுய உதவி 1190 குழுக்களுக்கு 11 வட்டாரத்தை சேர்ந்த குழுக்களுக்கு 50.166 கோடியிலான நேரடி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தர்ராஜ் வழங்கினார். இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மாவட்ட பஞ்சாயத்துதலைவி தமிழ் செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனி துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

