• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கை.., சிவகங்கையில் H.ராஜா பேட்டி…

ByG.Suresh

Jan 8, 2024

சிவகங்கையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், தமிழக அரசுக்கு 8 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதால் திவால் ஆகும் நிலையில் உள்ளதாக தெரிவித்த H.ராஜா அமலாக்கத்துறை விசாரணையில் உள்ள அமைச்சர்களின் சொத்துக்களை ஏலமிட்டால் தமிழக அரசின் கடனை அடைக்கலாம் என்றும் பொன்முடியை பின்பற்றி அமைச்சர்கள் கே. கே. எஸ். எஸ். ஆர், தங்கம் தென்னரசு செல்லுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அரை டஜன் அமைச்சர்கள் சிறை சென்றால் நல்லது என்றவர், ஊழல் செய்து மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் சிறைக்கு சென்றால் அது மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என கூறிய H.ராஜா,
இந்தியாவில் மின்னணு வாக்கு பதிவு முறை சரியானதுதான் என்றும், மீண்டும்
வாக்குச்சீட்டு முறை தேவை இல்லை என்றவர், சென்னையில் நடைபெறும்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் முடிவுகள் உண்மையானால் அதனை பாராட்டலாம் என்றும் தெரிவித்தார்.