• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சக வீரரை தாக்கிய அப்ரிடி…மைதானத்தில் சலசலப்பு

Byகாயத்ரி

Nov 22, 2021

வங்கதேசம் – பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியில், வங்கதேச பேட்ஸ்மேனின் காலில் வேண்டுமென்றே பந்தை வீசி காயப்படுத்திய அப்ரிடிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் வங்கதேசத்தில் நடந்து வருகிறது. இதில், முதல் இரண்டு டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது.நேற்று முன்தினம் நடத்த இரண்டாவது போட்டியின்போது பாகிஸ்தான் பவுலர் ஷகீன் ஷா அப்ரிடி வீசிய பந்தில் வங்கதேச பேஸ்ட்மேன் அபிப் ஹுசைன் சிக்ஸர் அடித்தார். இதனால் ஆத்திரமடைந்த அப்ரிடி, பந்தை ஹுசைனை தாக்கும் விதமாக வீசினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சக வீரரை தாக்கிய வகையில் அப்ரிடிக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.