விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அவர்களிடம் பள்ளபட்டி ஊராட்சி இந்திராநகரில் 15வது வார்டில் ஜல்ஜீவன் திட்டம் தண்ணீர் குழாய் உடைந்து கிடக்கிறது ஒருபகுதி மட்டும் தண்ணீர் வருகிறது .

மறுபகுதி 40நாட்கள் ஆகியும் வரவில்லை அதை தொடர்ந்து பள்ளபட்டி ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தியும்
வேலை நடைபெறமால் இருக்கிறது.
ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் வார்டு உறுப்பினர் வைரம் பொதுமக்கள் சார்பில் மனு அளித்தார்.
மனுவைப் பெற்றுக் கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள்
சம்மந்தபட்ட துறை அதிகாரிகளிடம் ஜல்ஜீவன் திட்டத்தில் தண்ணீர் மற்றும்
அடிப்படை வசதிகளை துரிதபடுத்த உத்தரவிட்டா்.
உடனடியாக நடவடிக்கைக்கு உத்தரவிட்ட கலெக்டர் சுகபுத்ராவுக்கு காங்கிரஸ் கமிட்டியினர் சார்பில் வைரம் நன்றி தெரிவித்தார்.




