மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை கடந்த 21 ஆம் தேதி நேரில் சந்தித்து குறைநிறைகளை கேட்டறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் – யிடம் ஆதாரில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய முடியாத நிலை குறித்தும், பெரும்பாலான மக்களுக்கு ரேசன் கார்டுகள் இல்லை என கோரிக்கை வைத்தனர்.,

இந்த கோரிக்கையின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இன்று மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கே அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று அவர்களின் குறைகளை சரி செய்யும் வண்ணம் சிறப்பு முகாம் உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.,

இந்த சிறப்பு முகாமினை உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார் நேரில் ஆய்வு செய்து, மலைவாழ் மக்களுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.






