கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட தினசரி காலண்டர்களை குளித்தலை நகர செயலாளர் ராஜாளி மணிகண்டன் தலைமையில் குளித்தலை நகர பகுதியான சங்ககேட் முதல் பெரியபாலம் வரை பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து தினசரி காலண்டர்களை வீதி வீதியாக நடை பயணமாக சென்று வழங்கினர்

அடுத்த கட்டமாக நாளை முதல் வார்டு செயலாளர்கள்,பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேலான தினசரி காலண்டர்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெறுமென கூறினர்.
இந்நிகழ்வின் போது மாவட்ட மற்றும் நகர கழக நிர்வாகிகள்,மகளிர் அணியினர்,வார்டு கழக செயலாளர்கள்,தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




