சிவகங்கை 18வது வார்டுக்குட்பட்ட மாப்பிளைதுறை ஊரணி தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் குப்பைகள் தேக்கம் அதிகரித்து காணப்பட்டது. மழைக்காலங்களில் ஊரணியில் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து காணப்பட்டது. இதனால் மழைநீரை சேமிக்கும் வகைகள் தூர்வாரி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விளையாட்டு பூங்கா மற்றும் நடைபாதை அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ரூபாய் 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி.எம். துரைஆனந்த் மாப்பிளைதுறை ஊரணி தூர்வாரும் பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் இன்று மதியம் கலந்து கொண்டனர்.

