சிவகங்கை நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் குப்பை அகற்றுவதற்கான சாதனங்கள் இன்று வார சந்தை பகுதியில் நகர் மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையில் வழங்கப்பட்டது.


நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு கூடுதலாக குப்பைகள் அகற்றுவதற்கான சாதனங்கள் தேவைப்பட்டன பருவமழை காலத்தின் போது வடிகால்களை சீரமைப்பது மரங்கள் சாய்ந்து விட்டால் அவற்றை வெட்டி அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சாதனங்களின் தேவைகள் இருந்து வந்த நிலையில் இன்று சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான தளவாட பொருட்களை வாரச்சந்தை பகுதியில் வழங்கினார்.


மேலும் துப்புரவு பணியாளர்கள் முறையாக கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து பணியாற்ற வேண்டுமென பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் அறிவுரை வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சுகாதார ஆய்வாளர் ,மேஸ்திரி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ராமதாஸ் ,வீரகாளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

