• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நிதி மேலாண்மை சீர்கேட்டிற்கு காரணமான முதல்வர்..,

ByR. Vijay

Sep 26, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில் ஏடி ஜெ.தர்மாம்பாள் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து கல்லு£ரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டத் தலைவர் சித்திரா தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகம் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதகாலமாக வழங்காத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். ஓய்வுகால பணப்பலன்களை உரிய காலத்தில் பெற்றுத் தர வேண்டும். நிர்வாக சீர்கேடு மற்றும் நிதி மேலாண்மை சீர்கேட்டிற்கு காரணமான முதல்வர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசுக்கு செலுத்த வேண்டிய பத்து சதவித . பங்குத்தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜூ, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பாலாம்பாள், சிஐடியு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் அற்புதராஜ்ரூஸ்வெல்ட், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். வட்டப் பொருளாளர் .ரமேஷ் நன்றி கூறினார்.