• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்தை துவக்கி வைத்த முதலமைச்சர்..!

Byவிஷா

Nov 29, 2023

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த சொகுசு பேருந்தில் முதல் பயணமாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் செல்கின்றனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்து பயன்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா செல்லும் வகையில், மாணவர்களின் சுற்றுலா பயணத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து சொகுசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்த முதலமைச்சர், அதனுள் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.