கன்னியாகுமரி நகராட்சி நூலக கட்டிடத்தை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், நகராட்சி ஆணையர் கண்மணி, புனித அலங்கார மாதா திருத்தல பங்கு தந்தை உபால்டு மரியதாசன், துணைத் தலைவர் டாலன் டிவிட்டர் இணைந்து குத்துவிளக்கு ஏற்றினர், இதில் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் சகாய சர்ஜினாள் பிரைட்டன், சிவசுடலை மணி, இக்பால், ஆட்லின் முன்னாள் கவுன்சிலர் டி.தாமஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் பிரைட்டன், சின்னமுட்டம் ஷ்யாம், நிசார், ரூபின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.