மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் அமைந்துள்ளது., தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு.

50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது, நகர் புற பகுதி என்பதால் தினசரி போக்குவரத்து நெரிசல் மற்றும் லாரிகளின் புகை காரணமாக பொதுமக்களும் தினசரி அவதியுற்று வந்தனர்.
இந்த கிடங்கை மாற்றியமைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த சூழலில், ஒவ்வொரு எம்எல்ஏ வும் தொகுதியின் 10 கோரிக்கைகளை உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வழங்க முதல்வர் உத்தரவிட்டிருத்தார்.
அந்த வகையில் உசிலம்பட்டி எல்எல்ஏ பி.அய்யப்பன், முதல் கோரிக்கையாக இந்த கிடங்கியை மாற்றியமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
அதன் அடிப்படையில் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து பகுதியில் புதிதாக சுமார் 5 கோடியே 50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த கிடங்கை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி, ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ( அதிமுக ஒபிஎஸ் அணி ), 50 ஆண்டுகளுக்கும் மேலாக உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கும் இந்த கிடங்கினால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தாகவும், பொதுமக்களும் தினசரி அவதியுறும் நிலை குறித்து எம்எல்ஏ வின் 10 கோரிக்கைகள் திட்டத்தில் முதல் கோரிக்கையாக இந்த கிடங்கை மாற்றியமைக்க கோரிக்கை வைத்ததாகவும்.
அதை நிறைவேற்றி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றியை தொகுதி மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.








