• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

3 முடிவுற்ற திட்டங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்..,

BySeenu

Mar 13, 2026

கோவை மாநகராட்சி பகுதியில் 3 முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர், மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பேருந்தில் பயணம் செய்து பயணிகளிடம் கலந்துரையாடினர்.

கோவையில் பல்வேறு திட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டு வருகிறது மேலும் பல்வேறு பணிகள் புதிதாக துவங்குவதற்கு அடிக்கல் நாட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் முடிவுற்ற மூன்று திட்டப் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதன்படி கோவை உக்கடம் பேருந்து நிலையம் 13 கோடி ரூபாய் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. 3.27 ஏக்கரில் உக்கடம் பேருந்து நிலையம் ஒன்றாவது முனையம் அமையப் பெற்றுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகங்கள், கழிவறை வசதி, காத்திருப்பு இருக்கைகள், பொது WiFi வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான தளங்கள், சிசிடிவி கேமராக்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட வசதிகளும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தனியாக ஓய்வு எடுக்கும் அறைகளும் உள்ளன.

மேலும் கவுண்டம்பாளையம் மற்றும் கணபதி மாநகர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் 3.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் முதல்வரின் நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உட்பட கவுன்சிலர்கள் பொதுமக்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேருந்தில் பயணித்த மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பொதுமக்களிடம் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து எடுத்துரைத்துரைத்து கலந்துரையாடினர்.