கடலூர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வடக்கு மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் மே தினப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, எம்.சி.சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய வளர்மதி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி இது என்றும், காவல்துறை அரசுக்கு துணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதிமுக பாஜக கூட்டணி ஒரு வெற்றி கூட்டணி என தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் முதல்வரை சுற்றி கருநாகங்கள் உள்ளது, இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இன்னும் பத்து மாதங்கள் தான் உள்ளன. இந்த மே தினத்தில் இருந்து நாம் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.
கடலூரில் நடைபெற்ற மே தின கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், பகுதி செயலாளர் வீ.கந்தன், உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.