நாகை அருகே அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆலய ஆவணி பிர்மோத்ஸவ திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான செடில் உற்சவம் நடைபெற்றது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து செடில் மரத்தில் ஏற்றி நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். விழாவினை முன்னிட்டு கடற்கரையின் நடைபெற்ற இரவை பகலாக்கும் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சியில் டிராகன், ஈச்சை மரம், சக்கரம், சரவெடி முதல் வண்ணமயமான வான வேடிக்கைகள் விண்ணில் சீறி பாய்ந்தன.

இதனை கடற்கரையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து செல்போனில் படம் பிடித்து சென்றனர், விழாவினை முன்னிட்டு நேற்று முதல் அக்கரைப்பேட்டை, கீச்சான் குப்பம், கல்லார் உள்ளிட்ட மூன்று மீனவ கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட விசை படகுகள் மற்றும் கண்ணாடி இலை படகுகள்






; ?>)
; ?>)
; ?>)
