• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவசங்கர் பாபா மீதான வழக்கு ரத்து.. ஐகோர்ட் உத்தரவு..!

ByA.Tamilselvan

Oct 19, 2022

பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு, பள்ளி மாணவர் ஒருவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்தாக கொடுக்கப்பட்ட புகாரில் கடந்த ஆண்டு சிவசங்கர் பாபா மீது பதிவான வழக்கிற்கு எதிராக மனு அளிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டுகளின் கீழ் 10 ஆண்டுகளுக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக சிவசங்கர் பாபா தரப்பு தெரிவித்தது.
ஆனால், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என சிபிசிஐடி தரப்பு வாதிட்டது. பாலியல் தொந்தரவு என்பது தீவிரமான குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனே புகார் அளிக்க தயங்குகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தயங்குவதற்கு அச்சம் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட நபர்களின் செல்வாக்கும் காரணம் என்றும், சட்டவிரோத செயல்கள் ஒரு நாள் வெளியில் வரும்போது அந்த நபரால் பாதிக்கப்பட்ட பலர் புகாரிக்க முன்வருவது இயல்பு என்று நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில், பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.