• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

ByA.Tamilselvan

Jan 5, 2023

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும். எனவே, அந்த பதவியானது ஆதாயம் தரக்கூடிய பதவி. அரசியல் சாசனப்படி, கவர்னராக பதவி வகிப்பவர் இதுபோன்று ஆதாயம் தரக்கூடிய பதவிகளை வகிக்கக்கூடாது. இதனால், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பெறுப்பேற்ற நாளில் இருந்து கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னராக பதவியில் நீடிக்க தகுதி இழப்பு ஆகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதானா என்பது குறித்த விசாரணை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வேறு வாதங்கனை முன்வைத்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதானா, இல்லையா என்பது குறித்த தீர்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், இவ்வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர். அப்போது, தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.