• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சவாரிக்கு வந்த காரை மடக்கி பறிமுதல்..,

ByKalamegam Viswanathan

Jun 21, 2025

மதுரை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர் அவர்களின் சேவைக்காக மதுரை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வாடகை கார் ஓட்டுநர்கள் உரிமம் எடுத்து சவாரி அடித்து வருகின்றனர். உரிமம் பெற்ற வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு மதுரை விமான நிலையத்திற்குள் அனுமதி இல்லை. மேலும் பயணிகள் சொந்த வாகனங்களில் வருவதற்கு அனுமதி உண்டு.

இந்த நிலையில் சம்பக்குளம் சத்யா நகர் பகுதியில் இயங்கி வரும் k3 ரைடு என்ற தனியார் ஏஜென்சி, சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம் இருந்து காரை பெற்று சொந்த வாகனங்களை வணிகரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதாகவும். இந்த தனியார் ஏஜென்சி இடம் பல்வேறு ஓன்போர்டு வாகனங்கள் இருப்பதாகவும் அதை வணிக ரீதியாக பயணிகளை கொண்டு சவாரி செய்வதால் மதுரை விமான நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்து வாடகைக்கு கார் ஓட்டி வரும் ஓட்டுநர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது.

இந்த நிலையில் கே 3 ரைடு என்ற தனியார் ஏஜென்சி வணிகரீதியாக செயல்பட்டும் ஓன் போர்டு வாகனங்கள் அடிக்கடி விமான நிலையத்திற்கு பயணிகளை ஏற்றுவதும், இறக்குவதுமாக இருந்துள்ளது. இதனை விமான நிலையம் வளாகத்திற்குள் இருக்கும் வாடகை கார் ஓட்டுநர்கள் கவனித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பயணி ஒருவரை ஏற்றுவதற்காக TN 58 BK 6279 எண் கொண்ட சொகுசு காரை அவனியாபுரத்தை சேர்ந்த ரவி என்ற ஓட்டுநர் கே3 ரைடு தனியார் ஏஜென்சி மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதனை கண்ட அங்குள்ள ஓட்டுநர்கள் அந்த காரை சிறை பிடித்து உடனே வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்து பெருங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சொந்த பயன்பாட்டிற்காக வாகனத்தை பதிவு செய்து வாங்கி பின்னர் வணிகரீதியாக பயன்படுத்தியதால் அபதாரம் விதிக்கப்படும்.