மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்குவது உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டம்., இந்த திட்டம் உருவாக போராட்டம், கட்டமைப்பு பணிகளை முடிக்க போராட்டம், தண்ணீர் திறக்க போராட்டம் என போராடியே இந்த திட்டம் மூலம் தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது.

வைகை அணையில் 69 அடியில் உள்ள இத்திட்டத்தின் மதகு பகுதியை 65 அடியாக குறைத்து ஆண்டும் தோறும் வைகை அணையிலிருந்து நிரந்தரமாக தண்ணீர் திறக்க கோரி, விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் விவசாயிகள், மதுரை, தேனி மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் இது வரை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி.

இன்று உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில், விவசாய சங்கத்தினர், பெண்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
58 கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், கால தமதப்படுத்தி வரும் திமுக அரசை கண்டித்தும் கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உசிலம்பட்டி எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர், முதன்மை செயலாளர்கள் வரை முறையாக மனு அளித்தும் நடவடிக்கைகள் இல்லை, ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுத்து தண்ணீர் திறக்கவில்லை எனில் உசிலம்பட்டி மக்களை திரட்டி வைகை அணையில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.













; ?>)
; ?>)
; ?>)