• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வெறிச்சோடி காணப்பட்ட முகாம்..,

ByAnandakumar

Sep 25, 2025

கரூர், மாநகராட்சிக்குட்பட்ட 48 வது வார்டு பகுதி மக்களுக்கு தான்தோன்றி மலை தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் குறிப்பிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மனுக்களை பெற தயாராக இருந்த போதும் இந்த முகாமில் மனுக்களை அளிப்பதற்கு பொதுமக்கள் யாரும் வராததால் காலி இருக்கைகளாக வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த முகவில் குறிப்பிட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாமை புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று நேற்று வருவாய்த்துறை சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் அறிவித்திருந்த நிலையில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வருவாய்த்துறை சார்பில் எந்த ஒரு முகாம்களும் அமைக்கப்படவில்லை,

திமுக அரசின் மிகப்பெரிய திட்டமாக நினைத்திருந்த வேளையில் அதற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வராமல் விளம்பரத்திற்காக மட்டும் மாதத்திற்கு ஒரு திட்டத்தை கொண்டு வரும் திமுக அரசு பொதுமக்கள் வழங்கக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.