மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் 1350 வது சதய விழாவை முன்னிட்டு வீர பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்கம் & ஆனையூர் கிராம பொதுமக்கள் & பறம்புநாடு வீர விளையாட்டு சங்கம் சார்பாக மாபெரும் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இவ்விழாவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு மஞ்சு விரட்டு போட்டியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மதுரை திருச்சி சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. வீறு கொண்டு எழுந்த காளைகளை காளையர்கள் அடக்கினர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி. ராஜசேகரன், வீரப் பேரரசர் முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கார்த்திக்ராயர் மாநில பொதுச் செயலாளர் இளங்கோவன் மற்றும் விழா கமிட்டினர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




