நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய அலுவலக முகாமில் இருந்து குந்தா பாலத்திற்கு செல்லும் நடைபாதை இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர்கள் மூடி பொதுமக்கள் நடக்க மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது .
குந்தாவிலிருந்து மஞ்சூர்ருக்கு சாலை மார்க்கமாக மூன்று கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அல்போன்சா தனியார் பள்ளியில் இருந்து குந்தா பாலம் செல்வதற்கு கான்கிரீட் நடைபாதை அமைக்கப்பட்டு பல வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக பராமரிப்பின்மை காரணமாக இருபுறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள.

முட்புதர்களால் நடைபாதை முற்றிலும் மூடி நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அவ்வப்போது நடைபாதைகளில் காட்டெருமை. சிறுத்தை. கரடி வனவிலங்குகள் நிற்பதையும் அதைக் கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓட வேண்டிய சூழ்நிலை உள்ளது. கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சி பராமரிப்பில் உள்ள நடைபாதை கடத்த சில மாதமாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் .உடனடியாக நடைபாதையை உள்ள முட்பதர்களை அகற்றி தூய்மைப்படுத்த தர பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






; ?>)
; ?>)
; ?>)
