• Wed. Dec 24th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தன்னுயிர் பிரியும் நிலையில் 5 பேருக்கு வாழ்வளித்த சிறுவன்..,

ByKalamegam Viswanathan

Sep 13, 2025

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கூத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது 15 வயது மகனான ஆனந்தபோதி குமரன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தலையில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 11 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது தந்தையின் ஒப்புதலுடன் சிறுவனின் உடலுறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம், கருவிழிகள் ஆகியவை தானாமாக வழங்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

உடல் உறுப்பு தானம் அளித்த சிறுவனின் உடலுக்கு அரசு மருத்துவமனை முதல்வர், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மரியாதை செலுத்தினர்.

சிறுவனின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கருவிழிகள் மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்பட்டது.