• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

தாமதமாக பயணம் தொடங்கிய படகு.., அலை கடலென திரண்ட சுற்றுலா பயணிகள்…

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக வழக்கமாக காலை 8_மணிக்கு தொடங்கும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு இயக்கம் தாமதமானது.

ஞாயிறு விடுமுறை தினமானதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கடல் சீற்றம் பிற்பகல் வாக்கில் சகஜம் நிலைக்கு வந்ததை தொடர்ந்து.4_ங்கு மணி நேரம் தாமதமாக படகு பயணம் தொடங்கியது. சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகு பயணம் மேற்கொண்டனர்.

சாதாரணமாக மாலை 5_மணிக்கு நிறைவடையும் படகு பயணம் இன்று மாலை 6_மணி வரை நீடிக்கப்பட்டதால், சுற்றலா பயணிகள் ஏமாற்ற அடையாது, கடலில் படகு பயணம் மேற்கொண்டு கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை பாறை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று வந்ததால் சுற்றுலா பயணிகளின் ஏமாற்றம் தவிர்க்க பட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.