• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காவியை அழிக்க கருப்பு, சிவப்பு நீளமும் ஒன்று சேர வேண்டும் – ஆ.ராசா

2024 நாடாளுமன்றத் தேர்தலில் காவியை வீழ்த்த, கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் வீழ்த்தி விடலாம்.


சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சார்பில் பெரியாரியல் பேரறிஞர் ஆனைமுத்து படத்திறப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆ.ராசா அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.


அந்த விழாவில் பேசிய அவர், பெரியாரின் சுயமரியாதை மற்றும் கொள்கையை பின்பற்றியவர் ஆனைமுத்து. பூலோக ரீதியாக ஆனைமுத்துவும், தானும் ஒரே மாவட்டத்தில் பிறந்தவர்கள். ஒரு தந்தைக்கு ஆற்றக்கூடிய கடமையை ஒரு மகன் எப்படி செய்வானோ, அப்படியான உணர்வோடு இந்த விழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.


மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காவியை வீழ்த்த, கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றிணைந்தால் வீழ்த்தி விடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.