• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மனோதங்ராஜூக்கு சவால் விட்ட பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன்

இந்த தேர்தலில் நாங்க ஜெய்ப்போம் அடுத்த சட்டமன்ற தேர்தலில் மனோதங்கராஜ் டெப்பாசிட் வாங்குவாரா? மனோதங்ராஜூக்கு சவால் விட்ட பாராளுமன்ற பாஜக வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் மார்த்தாண்டத்தின் அருகே பேட்டி அளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைதேர்தலில் பாஜக வேட்பாளர் நந்தினியை ஆதரித்து, முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாராளுமன்ற வேட்பாளருமான பொன். இராதாகிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட பயணம் பகுதியிலிருந்து தேர்தல் பிரசாரத்தை துவங்கினார். முன்னதாக பயணம் செண்பக வல்லியம்மன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்த பொன். இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்..,

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தேர்தல் பிரசாரத்தில் உள்ளதாகவும் போகும் இடங்களில் மக்கள் நல்லவரவேற்பு அளித்து வருதாகவும் யார்வந்தால் ஒரு எஃபெக்ட்டா இருக்குமோ அவர்களை பற்றி பேசுவது இயல்பான ஒன்று அதனால் மோடி தமிழகத்திற்குள் வருவது என்பது பேச்சு பொருளாக மாறுகிறது கச்சதீவு பிரச்சினையை பொறுத்தவரையில் 1974ஆம் ஆண்டு துவங்கிய பிரச்சினையில் பாஜக தான் முதலில் வழக்கு தொடுத்தது ராமநாதபுரம் சேதுபதி மஹாராஜாவுக்கு சொந்தமான நிலம் கச்சதீவு என்பதால், அது தமிழற்களுக்கு சொந்தமானது கச்சதீவு பிரச்சினை இருநாட்டு சம்மந்தமான விஷயம் எடுத்தோம் கவுத்தோம் என செய்ய முடியாது. அருணாசல பிரதேஷ விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொய்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நான்குவழிசாலைக்கு பணிகள் 2016ஆம் ஆண்டு துவங்கபட்டது. அதிலிருந்து 2019வரை இயற்கை அழிவதை பற்றி மனோதங்கராஜுக்கு கவலையில்லை 2019ல் தான் மனோதங்கராஜுக்கு ஞானோதயம் ஏற்பட்டதா அதிலிருந்த இவர் அமைச்சராக இருந்தும் ராஜேஷ்குமார் எம்எல்ஏவாக இருந்தும் என்ன பிரயோஜனம் களியக்காவிளை பகுதி உட்பட 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களையும் 30கோவில்களையும் மசூதிகளையும் இடிக்க திட்டமிட்டுள்ளனர் தான் பாராளுமன்ற உறுப்பெனராக இருந்தவரையில் உரிய நிவாரணம் கொடுத்தோம் எனவும் அதற்கு பிறகு உள்ள பிரச்சினைக்கு விஜய்வசந்த் தான் காரணம் மனோதங்கராஜ் பிள்ளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்.
பல்வேறு வழிபாட்டுதலங்களில் சுய உதவிகுழு பெண்களை அமரவைத்து காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபடுகிறது ஒருசில வழிபாட்டுதலங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அவுவலகமாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் மனோதங்கராஜ் அடுத்த தேர்தலில் பத்பநாபபுரம் சட்டமன்ற நொகுதியில் டெப்பாசிட் வாங்குவாரா என்பது காலம் பதில் சொல்லும் குமரி மாவட்ட மக்களை முட்டாளாக்கும் அவரது ஆணவத்திற்கு ஜூன் 4 முற்றுப்புள்ளிவைக்கபடும் எனவும் தெரிவித்தார்.