• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இரண்டு முத்துகளை களம் இறக்கும் பிக்பாஸ் ஷோ…

Byகாயத்ரி

Sep 20, 2022

தமிழில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. அந்த வகையில் பல சீசன்களை கடந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் தமிழில் பிக்பாஸுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஐந்து சீசன்களில் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் கமலுடன் இந்நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்ளவுள்ள நட்சத்திரங்கள் குறித்து தகவல்கள் அவ்வபோது வெளியாகின. அதன்படி இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் குறித்த பெயர்கள் தான் இப்போது பேசப்பட்டு வருகிறது.பிக்பாஸ் சீசன் 6ல் மதுரை முத்துவை கலந்து கொள்ள அணுகியிருப்பதாகவும் அவர் கேட்ட சம்பளத்தை தர சேனல் சம்மதித்துள்ளதால் கலந்து கொள்ளலாம் என மதுரை முத்துவும் முடிவு எடுத்திருந்துள்ளாராம். இது ஒருபுறம் இருக்க யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்துவும் பிக்பாஸ் 6ல் கலந்து கொள்ள சம்மதிக்க வைத்துள்ளது மதுரை முத்துக்கு தெரியவந்ததால் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என மதுரை முத்து கூறிவிட்டதாக தகவல் வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு முத்துவும் இருந்தால் சீசன் தெறிக்கவிடும் என்பதில் சந்தேகமில்லை…