• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குடிகார வாலிபரின் அட்ராசிட்டி.. ஓடிஒளிந்த பொதுமக்கள்… வேடிக்கை பார்த்த காவல்துறை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிகார வாலிபர் செய்த அட்ராசிட்டி. பயந்து ஓடிய பொதுமக்கள். பரிதவித்த காவல்துறையினர்.!
புதுக்கோட்டையில் செயல்படும் அரசு மருத்துவக்கல்லூரியில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபர் விபத்தில் அடிபட்டு அதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் தொடர் சிகிச்சை பெற்று வந்தாலும் அவ்வப்போது வெளியில் சென்று விடுவது இவருக்கு வழக்கமாக இருந்துள்ளது. வார்டில் தேடிப்பார்த்துவிட்டு காணவில்லை என்று எழுதிவிடுவார்கள் போலும். இவரும் சில தினங்கள் சென்ற பிறகு மீண்டும் சிகிச்சைக்கு வருவதும் செல்வதும் வாடிக்கை.
இன்னிலையில் நேற்று இரவு (31-10-22) அவர் வெளியே சென்றுவிட்டு வந்த அவர், குடித்துவிட்டு வந்துள்ளார். இதனையறிந்த மருத்துவமனை காவலாளிகள் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் ஆந்திரமடைந்த வாலிபர் காவலாளிகளை அடிக்கத் துவங்கியதுடன் அங்குள்ள கதவு மற்றும் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக்கண்ட பொதுமக்களும் சிகிச்சையில் இறுந்த நோயாளிகளும் பயந்து ஓடியுள்ளனர். தகவல் அறிந்து வந்த மருத்துவமனை காவல்நிலைய போலீஸ் அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெறியாமல் விழித்துக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். (குடிகாரரின் மேல் கை வைக்கப் போய் பின்னால் வரும் அக்கப்போறுக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற அச்சம் அவர்களுக்கு) ஒரு வழியாக பார்ட்டியை சமாதானப்படுத்தி மீண்டும் சிகிச்சையில் சேர்த்திருப்பதாக கேள்வி. கால்வலி போய் முதுகுவலி வந்த கதையாக குடியை மறக்க வேண்டிய சிகிச்சையும் சேர்த்துக் குடுக்க வேண்டிய நிலையில் மருத்துவர்களும்…