கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலையில்.கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து, அண்ணா சிலையின் கீழ் கலைஞரின் படம் மலர் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கலைஞர் கருணாநிதியின் 102_வது அகவை விழாவில், கலைஞரின் திரு உருவப்படத்திற்கு நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பங்கேற்ற திமுக வில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள், நகராட்சி வார்ட் உறுப்பினர்களும் மறைந்த தலைவர் கலைஞரின் 102 வது அகவை விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

கன்னியாகுமரிக்கு இன்று வந்துள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள பன்மொழி பேசும் சுற்றுலா பயணிகளுக்கு நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் இனிப்பு வழங்கியும், கன்னியாகுமரியில் கலைஞரது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
