• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

விடை பெறுகிறது வடகிழக்கு பருவமழை

ByA.Tamilselvan

Jan 10, 2023

ஜன.12ம் தேதி அன்று வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது. நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக் கூடும்.வடகிழக்கு பருவமழை விலச்செல்லவதால் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.