• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விரக்தியில் வெளியேறிய அதிமுக வேட்பாளர் தென்னரசு

ByA.Tamilselvan

Mar 2, 2023

4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு மட்டும்
மையத்தில் இருந்ததால் விரக்தியில் வெளியேறினார்!
ஈரோடு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மிகப் பெரிய முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு சுமார் 10,000 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், அவரை காட்டிலும் 12 ஆயிரம் வாக்குகள் அதிகமாக அதாவது சுமார் 32 ஆயிரம் வாக்குகள் பெற்று இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்,அடுத்தடுத்து சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. , அதிமுக தொண்டர்கள் விரக்தியில் உள்ளனர். இதனால் தான் வாக்கு எண்ணும் மையத்தில் கூட அதிமுக தொண்டர்கள் யாருமே பெரிதாக வரவில்லை
இப்போது 4ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தென்னரசு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார். அதிமுக சார்பில் தென்னரசு மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து வெளியேறும் போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது என்று செய்தியாளர்களிடம் காட்டமாகச் சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பினார்.